search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூர் சர்வதேச விமான நிலையம்"

    வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரும் பயணிகள் கையாளும் புதிய தந்திரம் என்ன? என்பது பெங்களூரு விமான நிலையத்தில் இன்று தெரியவந்துள்ளது.
    பெங்களூரு:

    வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    மிக்சிக்குள் தங்கம், காலணிகளுக்குள் தங்கம், கியாஸ் அடுப்புக்குள் தங்கம் போன்ற நூதன முறைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது.

    இந்நிலையில், தங்கம் கடத்திவரும் பயணிகள் கையாளும் புதிய தந்திரம் என்ன? என்பது பெங்களூரு விமான நிலையத்தில் இன்று தெரியவந்துள்ளது.

    கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டிக்குள் கிடந்த ஒரு மர்மப் பொட்டலம் சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வையை உறுத்தியது.

    கருப்பு நிற உறையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொட்டலத்தை பிரித்துப் பார்த்த அதிகாரிகள், அதனுள்ளே 2.8 கிலோ எடைகொண்ட தங்க செயின்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


    வெளிநாடுகளில் இருந்து வழியில் நின்று செல்லும் விமானங்களில் வரும் பயணிகள், இடைவெளியில் காத்திருப்போர் பகுதிக்கு வரும்போது, தாங்கள் கடத்திவந்த பொருளை இப்படி குப்பைத்தொட்டியில் வீசி வருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இப்படி வீசப்படும் பொருட்களை குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சில இடைத்தரகர்கள் மூலம் உரியவரிடம் சேர்க்கப்பட்டு, இதற்கான ‘சேவை கட்டணம்’ பெறப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    சமீபத்தில் இதுபோல் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட தங்க செயின்களின் இந்திய மதிப்பு 87.69 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.

    இதேபோல், பல விமான நிலையங்களில் சோதனையில் சிக்காமல் கடத்தல் தங்கம் கைமாறி இருக்கலாம் என கருதும் அதிகாரிகள், இதுதொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். #smugglinggold #Bangaloreairport
    ×